
ஜோகூர் பாரு , ஜூன் 22 – 11 பறவை இனங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக , சிங்கப்பூர் ஆடவருக்கு 7 நாட்கள் சிறை தண்டனையும் 80,000 ரிங்கிட் அபராதத்தையும் , Sesyen நீதிமன்றம் வழங்கியுள்ளது.
வனவிலங்கு மற்றும் பூங்கா துறை, சுல்தான் இஸ்கண்டார் எனும் கட்டடத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அரா வெட்டர் , (ara wetar) , மாக்காவ் போன்ற 11 இனத்தை சேர்ந்த கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அச்சோதனை முடிவில் 10 மரப்பெட்டிகள் , பறவைகளின் கூண்டு மற்றும் அனைத்து கிளிகளும் வனவிலங்கு மற்றும் பூங்கா துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.