
ஜொகூர்பாரு, செப் 19 – 85 கிலோ உதவித் தொகை எண்ணெய் பாக்கெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டு ஆடவரை போலீசார் கைது செய்தனர். நேற்று மதியம் 12.30 மணியளவில் 35 வயது சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜையின் காரை உளவுப் பிரிவினர் பின்தொடர்ந்து அவரைக் கைது செய்ததாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ Kamarul Zaman Mamat தெரிவித்தார். அந்த சந்தேக நபரின் கார் பூட்டில் ஐந்து அட்டை அட்டைப்பெட்டிகளில் 1 கிலோ சமையல் எண்ணெயை பதுக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் 17 பாக்கெட்டுகளில் அந்த சமையல் எண்ணெய் இருந்தது” என்று இன்று வெளியிட்டட அறிக்கையில் Kamarul தெரிவித்தார்.
உதவித் தொகையைக் கொண்ட சமையல் எண்ணெய் கடத்தலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று அவர் மேலும் எச்சரித்தார்.