
ஷா ஆலாம் , ஜன 20 – அனுமதியின்றி Jata Negara சின்னத்தை பயன்படுத்துவது குற்றமாகும். அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக, 20 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம், அல்லது மூன்றாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என பிரதமர் துறை ட்விட்டர் பதிவு ஒன்றின் வாயிலாக தெரிவித்தது.
Jata Negara அரசாங்க சின்னமாகும். மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு, அரசாங்க பதிவேட்டிலும் அது இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.
அதனால், அதிகாரப்பூர்வ பணிகளின் போது, அமைச்சுகள், அரசாங்க துறைகள், கூட்டரசு அரசாங்க பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே அதனை பயன்படுத்த அனுமதி உண்டு.
முன்னதாக, Jata Negara சின்னத்தை மாற்றி அமைப்பதும், தவறாக பயன்படுத்துவதும், 1963-ஆம் ஆண்டு பெயர் – சின்ன சட்டத்தின் கீழ் குற்றமாகுமென, நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.