Latestமலேசியா

அனுமதி கடிதத்துடன் மாநிலம் கடந்து கொள்ளையிட்ட geng 36 கும்பல்

மலாக்கா , ஜூன்  11 – MITI –யிடமிருந்து அனுமதி கடிதத்தைப் பெற்று, மாநிலம் கடந்து, Geng 36 கும்பலைச் சேரந்தவர்கள், மலாக்கா, க்ளேபாங்கில் ( Klebang), தொழிலதிபர் ஒருவரின் வீட்டில்  கொள்ளையிட்டிருக்கின்றனர்.

இம்மாதம் ஜூன் ஐந்தாம் தேதி நிகழ்ந்த அந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் 12 லட்சம் ரிங்கிட் இழப்பை சந்தித்ததாக, மலாக்கா போலீஸ்  தலைவர் அப்துல்  மஜிட் மொஹமட் அலி தெரிவித்தார்.

முகமூடி அணியாமல், பாராங்கத்தியைக் கொண்டு கொள்ளையிட்ட அந்த  கும்பலைச் சேர்ந்த  ஐவர் , கோலாலம்பூர், ஶ்ரீ பெட்டாலிங்கில் உள்ள , பண்டார் பாருவில் கைது செய்யப்பட்டனர்.

தொடக்க விசாரணையில், அந்த கொள்ளைக் கும்பல், தொழில் காரணமாக , MITI -அனைத்துலக வர்த்தக தொழிலியல் அமைச்சின் –யிடமிருந்து அனுமதி கடிதத்தைப் பெற்றிருந்தது தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!