Latestஉலகம்விளையாட்டு

அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்திலிருந்து மியன்மாரை நீக்குவீர்- நீச்சல் வீரர் கோரிக்கை

மெல்பர்ன், மே 4- அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்திலிருந்து   மியன்மாரை நீக்கும்படி அந்நாட்டின் முன்னணி நீச்சல் வீரரான Win Htet Oo கோரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில்  மக்களாட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றிய ஆளும் ரணுவ  அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தோக்யோ ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கப் போவதாக  ஆஸ்திரேலியாவில்  இருந்துவரும்  Win Htet தெரிவித்தார்.

ராணுவ அரசாங்கத்திற்கு மியன்மார் ஒலிம்பிக் மன்றம் கைப்பாவையாக இருப்பதால் அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் மியான்மாருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!