
கோலாலம்பூர், பிப் 21 – இந்தியர்களின் முடி திருத்தும் தொழில் என்பது, வெறுமனே முடி வெட்டுவது மட்டுமின்றி இன்று அது ஒருவரின் முகத்தோற்றத்தின் ஒப்பனைக் கலையாகவும் மாறிவிட்டது.
இந்த வளர்ச்சியை தற்போதுள்ள அனைத்து சிகை அலங்கார மையங்களிலும் நாம் பார்க்க முடிகிறது.
இந்த துறையில் இதர இனங்களுக்கும் அனைத்துலக நவீன மயத்துக்கு ஈடாகவும் கொன்டுச் செல்லும் முயற்சியில் நம் இந்தியர்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
அந்த அடிப்படையில்தான், நேற்று தலைநகரில் மலேசிய சிகையலங்கார அமைப்பின் ஏற்பாட்டில் 2வது முறையாக நடைப்பெற்ற அனைத்துலக சிகை அலங்கார பேஷன் மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற 6 நாடுகளைச் சேர்ந்த 16 குழுக்களிள் ஒரே இந்திய சிகையலங்கார குழுவாக மலேசியாவின் IN-STYLE குழு திகந்தது.
இதில் மற்றுமொரு சிறப்பான அம்சம், தேர்வாகிய சிறந்த படைப்புகளுக்கான 4 குழுக்களில் இவர்களும் ஒருவர் என்பதே.
சுங்கை வாங் பிளாசா, மெகா ஸ்டார் அரெனாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மிஹாஸ் (Mihas) மற்றும் இன்பா ஆகிய இரண்டு அமைப்புகளின் ஏற்பாட்டில், கண்ணா Hair Saloon and Academy, ஆதரவாளராக செயல்பட IN-STYLE குழு களம் இறங்கியது.
இந்திய சமூகம் சிகை அலங்கார தொழிலில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு என மிஹாஸ் மற்றும் இன்பா அமைப்பின் தலைவரும் , சிகையலங்கார பேஷன் மற்றும் கண்காட்சியின் ஏற்பாட்டாளருமான ஜபார் தெரிவித்தார்
இந்த நிகழ்சியின் மூலம் மலேசிய சிகை அலங்கரிப்பாளர்கள் பல்வேறு புதிய தகவல்களையும் நுனுக்கங்களையும் தெரிந்துகொண்டோம் என கண்ணா Hair Saloon and Academyயின் தோற்றுவிப்பாளரான கண்ணன் பழனிச்சமி தெரிவித்தார்.
சிகையலங்கார தொழிலில் பல புதுமைகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த அனைத்துலக கண்காட்சி பெரும் பயணாக இருந்ததாக கெடாவைச் சேர்ந்த மதி சிகையலங்கார நிலையத்தின் உரிமையானரான மதி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
ஒரு பெண் சிகையலங்கரிப்பாளராக இருக்கும் தாம் பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் சிகை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பெரும் பயணாக இருந்ததாக ஜெனனி ராமன் கூறினார்
இந்த சிகையலங்கார கண்காட்சியில் முதல் முறையாக கலந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி அடைந்தாக ஈப்போவைச் சேர்ந்த இளமாறன் தெரிவித்தார்.
இந்த துறையை பொருத்தமட்டில் இந்தியர்களுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அதனால்தான் இன்றளவும் கூட இந்திய சிகை அலங்கார கடைகளைக்கு இந்தியர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கல், சீனர்கள் என அனைத்து இனத்தவரும் தொடர் வாடிக்கையாளராக இருப்பதை பார்க்க முடிகிறது.
இதில் இன்னும் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொண்டு, அந்த கலையில் காலத்துக்கு ஏற்ற புதுமைகளை புகுத்தினால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது திண்ணம்.