
சிலாங்கூர், ஜன 27 – ஷா ஆலம் அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடர்பான காணொளி ஒன்றை தமது முகநூலில் வெளியிட்டுள்ள MBI – Menteri Besar Incorporated, அனைத்துலக தரத்தில் அது புதுப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய ஆற்றல் கொண்ட அந்த அரங்கம் தொடர்பான 6 நிமிடம் 22 வினாடி காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
மின்னியல் கோல் அறிவிப்பு பலகை, மாற்றுத்தினறாளிகளுக்கு ஏற்ப உள்ளரங்கு வசதி, அலுவல் மற்றும் உடை மாற்றும் அறைகள், தட்ப வெப்ப சூழலை கட்டுப்படுத்தும் வசதி ஆகியவற்றை அந்த அரங்கம் உள்ளடக்கியுள்ளது.
அதே சமயம், வருகையாளரின் வசதிக்காக, ஷா ஆலம் LRT, பேருந்து சேவைகளுக்கு அருகில் அந்த அரங்கம் கட்டப்படுகிறது.
முன்னதாக, செக்ஷன் 13-ரில் அமைந்திருக்கும் அரங்கத்திற்கு பதிலாக மாற்று அரங்கத்தை கட்ட, 78 கோடியே 70 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.