தெ ஹெக்,மார்ச் 8 – உக்ரைய்னுக்கு எதிரான படையெடுப்பை நிறுத்த வேண்டும் என அனைத்துலக நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்துவிட்டது.
அந்த விசாரணையில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் ரஷ்யா கூறிவிட்டதாக பி.பி.சி தகவல் வெளியிட்டது. இந்நிலையில், ரஷ்யாவின் செயல்பாடு வெற்று வாக்குறுதியாக மட்டுமே இருப்பதாக அனைத்துலக நீதிமன்றத்தின் தலவரும், உக்ரைய்ன் அதிபரும் சாடினர்.
உக்ரைய்னுக்கு எதிரான படையெடுப்பை சட்டப்பூர்வமானது என ரஷ்யா நியாயப்படுத்தி வருவதோடு அந்த தாக்குதல்கள் திட்டமிட்ட படுகொலை என உக்ரைய்ன் குற்றஞ்சாட்டியுள்ளது.