Latestமலேசியா

அனைத்து சமயங்களைக் கொண்ட ஐக்கிய குழுவை அரசாங்கம் புதுப்பிக்கும்

புத்ரா ஜெயா, ஆக 30 – சமயம் மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களை தீர்ப்பதற்கு சமயத் தலைவைர்ககளிடையே பேச்சு நடத்துவற்காக Inter Faith Harmony Committee எனப்படும் சர்வ சமய ஐக்கிய குழுவை அரசாங்கம் மீண்டும் புதுப்பிக்கவிருக்கிறது என பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் Mohd Na’im Mokhtar தெரிவித்திருக்கிறார். இந்நாட்டிலுள்ள பல்வேறு சமயங்களின் தலைவர்களைக் கொண்ட இக்குழுவிற்கு தாமும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டத்தோ Aaron Ago Dagang கும் கூட்டாக தலைமையேற்றுள்ளதாக அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி ஐக்கிய குழு உருவாக்கப்பட்ட போதிலும் அண்மையக் காலமாக அது செயல்படாமல் இருந்தது. சமய தலைவர்களுடன் Merdeka நல்லெண்ண சடங்கில் நேற்று கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது Mohd Na’im இத்தகவலை வெளியிட்டார்.

ஐக்கிய குழுவை சாத்தியமான விரைவில் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்படுத்தும் பொருட்டு பல்வேறு தலைவர்களுடன் தொடர்புகொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். மலேசியாவில் கடைப்பிடிக்கப்படும் பிரதான சமயங்களைச் சேர்ந்த தலவர்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக திகழும் இந்த ஐக்கிய குழு சமூகங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஐக்கியத்தை வலுப்படுத்துவற்கான நடைமுறை ஆலோசனைகளையும் செயல்திட்டங்களையும் அமல்படுத்தும் என Mohd Na’im தெரிவித்தார். நேற்றைய நிகழவில் பௌத்த, கிறிஸ்துவவ ,இந்து , சீக்கிய , Taoism ஆகியவற்றைக் கொண்ட சர்வ சமய மன்றத்தின் பிரநிதிகள் கலந்துகொண்டணர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!