
கோலாலம்பூர், மார்ச் 7 – ஐந்து தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டுள்ள அனைத்து குறைந்த மற்றும் நடுத்தர தொழில்துறையில் குறைந்தபட்ச 1,500 ரிங்கிட் சம்பள திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும்படி Bera நாடாளுமன்ற உறுப்பினர் Ismail Sabri Yaakob கேட்டுக்கொண்டார். ஐந்து தொழிலாளர்களுக்கும் குறைவாக உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளில் குறைந்தபட்ச புதிய சம்பளத் திட்டம் அமல்படுத்தப்படுவது எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பளத் திட்டத்தில் ஏற்படுத்தும் தாமதம் B40 மற்றும் M40 பிரிவினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.