
கோலாலம்பூர், மே 8 – தமது அனைத்து தனிப்பட்ட மற்றும் குடும்ப சொத்துக்களை வெளியிடும்படி இரு முறை பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமட்டை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
டாக்டர் மகாதீரின் பெயரை அன்வார் குறிப்பிடாவிட்டாலும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்த குறிப்பிட்ட சில தலைவர்கள் அவர்களது பணத்தை மலாய்க்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அன்வார் வலியுறுத்தியிருக்கின்றார்.
உங்களது சொத்துக்கள் கோடிக்கணக்கான மதிப்பில் உள்ளது. உங்களது பிள்ளைகளுக்கு விமானங்கள் உள்ளன, கப்பல்கள் உள்ளன, வெளிநாட்டு வங்கியில் கணக்கு உள்ளது, அவற்றை விற்பனை செய்து உள்நாட்டிற்கு கொண்டு வந்து இங்குள்ள மலாய்க்காரர்களுக்கு கொடுங்கள். அப்போதுதான்
நீங்கள் உண்மையான Pejuang அதாவது போராளி என அன்வார் கூறியுள்ளார்.
சிரம்பானில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார். அவரோடு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி , நெகிரி செம்பிலான் மந்திரிபுசார் Aminudin Harun ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதிகாரத்தில் இருந்தபோது தாமும் தமது குடும்பத்தினரும் கோடிக்கணக்கான ரிங்கிட்டை சேர்த்துக்கொண்டுள்ளதாக அன்வார் கூறியிருந்ததற்கு எதிராக அவருக்கு எதிராக 150 கோடி ரிங்கிட் அவதூறு வழக்கை டாக்டர் மகாதீர் தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.