
கோலாலம்பூர்,செப் 19 – நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் ரஹ்மா அரிசி விற்பனையை அமல்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின துணையமைச்சர் Fuziah Salleh தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அனைத்து வாடிக்கையாளர்களும் சிறப்பு கழிவு விலையில் வாங்குவது உறுதிப்படுத்தப்படும் என உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு தெரிவித்தது. ரஹ்மா நடமாடும் விற்பனை திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 5 கிலோ அரிசியை 13 ரிங்கிட் முதல் 14 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் என Fuziah தெரிவித்தார். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்வதற்கு எங்களால் முடிந்தவற்றை செய்வோம் என அவர் கூறினார்.