
புத்ரா ஜெயா, ஆக 30 – அனைத்து மலேசியர்களையும் ஒற்றுமை அரசாங்கம் பாதுகாக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அனைத்து மக்களின் உரிமைகளையும் அரசாங்கம் தற்காக்கும். ஒற்றுமையை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சிகைளையும் தவிர்ப்பதற்கு இது மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். இதனை சாதாரணமாக கருதக்கூடாது. வலுவாக இருந்த பல நாடுகள் மோசமான நிர்வாகம் மற்றும லஞ்ச ஊழலினால் சிதைத்துள்ளன என்பதை மறந்துவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில் தனது வானாளவிய கட்டிடங்களுக்காக மலேசியா பெருமையடையக்கூடாது. அதைவிட வசதி குறைந்தவர்கள் உட்பட தனது அனைத்து மக்களுக்கும் வழங்கும் வசதிகளுக்காக மலேசியா உலகளாவிய நிலையில் அறியப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்தார் .
நாளை கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்தை வரவேற்கும் வகையல் இன்று மதியம் புத்ரா ஜெயாவில் உரையாற்றியபோது பிரதமர் இதனை தெரிவித்தார். இதனிடையே நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும் பொருத்தமான அடிப்படை வசதிகளை அக்டோபர் மாதத்திற்குள் பெற்றுவிடும் என அன்வார் கூறினர்.
2023 ஆம்ஆண்டுக்கான தேசிய தின கொண்டாட்டங்கள் நாளை புத்ரா ஜெயாவில் கொண்டாடப்படவிருக்கிறது. மலேசியா மடானி, ஒற்றுமையை வலுப்படுத்தி நம்பிக்கையை நிறைவேற்றுவோம் என்ற கருப்பொருளில் இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்டங்கள் கொண்டாடப்படவுள்ளது