ஷா ஆலாம், மார்ச் 4 – மனித வள அமைச்சு வழிநடத்தும் வேலை வாய்ப்பு மையங்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படவிருக்கின்றன.
2022 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது போல் , மலேசியர்களுக்கு 6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கத்திற்காக அந்த மையங்கள் அமைக்கப்படுவதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கவிருக்கும் நிறுவனங்கள், வேலை தேடுபவர்களைச் சந்திக்க அந்த ஓரிட மையத்தைப் பயன்படுத்தலாம். தொழில்திறன் பயிற்சிகளை வழங்கவும், மாணவர்கள் அனுபவ தொழிற்பயிற்சியைப் பெறவும் அந்த மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நடைமுறை சார்ந்த சேவைகளும் அந்த மையத்தில் வழங்கப்படுமென டத்தோ ஶ்ரீ எம். சரவணன் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.