Latestமலேசியா

அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி Loh Siew Hong தனது பிள்ளைகளைச் சந்தித்தார்

கோலாலம்பூர், பிப் 16 – பெர்லிஸ் சமூக நல இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் தனது 3 பிள்ளைகளை அவரது தாயாரான Loh Siew Hong , இன்று மதியம் சந்தித்திருக்கும் தகவலை மகளிர் குடும்பம் சமூக மேம்பாட்டு அமைச்சு உறுதிப்படுத்தியது.

இவ்வேளையில் சமூக நலத் துறையின் கவனிப்பில் இருக்கும் பிள்ளைகளை , குடும்ப உறுப்பினர்கள் பார்க்க அனுமதிப்பதற்கு முன்பாக, சில விதிமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென அவ்வமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

குடும்ப உறுப்பினர் முன்னதாக சமூக நல அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கோவிட் SOP- களின் படி, வருகையாளர் கோவிட் சுய பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும் .

இன்று Loh Siew Hong அந்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி தனது பிள்ளைகளைச் சந்தித்திருப்பதாக அவ்வமைச்சு குறிப்பிட்டது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பிள்ளைகள் வேறோர் இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டதை மறுத்திருக்கும் அவ்வமைச்சு , அவ்விவகாரத்தில் உண்மையற்ற தகவல்கள் வெளியிடப்படுவதை தமது தரப்பு கடுமையாக கருதுவதாக கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!