Latestஉலகம்

அனைத்து விமான நிலையங்களிலும் தரையிறங்கும் பகுதிகளில் தீர்வையற்ற கடைகளை மூடுகிறது தாய்லாந்து அரசாங்கம்

பேங்காக், ஜூலை 9 – பேங்காக் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையம் உட்பட அனைத்து எட்டு பெரிய விமானங்களிலும் தரையிறங்கும் பகுதியிலுள்ள தீர்வையற்ற பொருட்கள் விற்கும் கடைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடவிருக்கிறது. இதனால் அனைத்துலக பயணிகள் தீர்வையற்ற பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்துலக விமான நிலையங்களில் தரையிறங்கும் பகுதியிலுள்ள அனைத்து தீர்வையற்ற கடைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு தீர்வையற்ற அனைத்து கடைகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் அனைத்துலக பயணிகள் தரையிறங்கும் பகுதியிலுள்ள தீர்வையற்ற வர்த்தக பகுதிகளில் சுமார் 390 மில்லியன் ரிங்கிட் அல்லது 3.02 பில்லியன் பாட் தொகை மதிப்பிலான விற்பனைகள் நடந்துள்ளதாக Bangkok Post பத்திரிகை தகவல் வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!