Latestஉலகம்

அனைவரும் பயன்படுத்தும் வகையில் ChatGPT வசதியை WhatsApp-க்குக் கொண்டு வந்த Open AI

பாரீஸ், டிசம்பர்-20, அமெரிக்கா கனடா தவிர்த்து, உலகம் முழுவதும் ChatGPT வசதியை இனி WhatsApp-களிலும் பயன்படுத்தலாமென Open AI அறிவித்துள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 1-800-242-8478 என்ற இந்த அமெரிக்க எண்களை உங்கள் கைப்பேசியில் வழக்கம் போல் save செய்யுங்கள்.

பின்னர் WhatsApp-பில் அந்த எண்ணைத் திறந்தால் ChatGBT-யுடன் உரையாடலாம்.

செய்திகளைப் பரிமாறிக் கொள்வது தொடங்கி, தொழில்முறைத் திட்டத்திற்கு உதவிக் கேட்பது, சமையல் செய்முறை பரிந்துரைகளைப் பெறுவது, வானிலைப் பற்றி அரட்டையடிப்பது என உங்களுக்கு வேண்டியதை நீங்கள் உரையாடலாம்.

தற்போதைக்கு, இது இன்னமும் சோதனைக் கட்டமே என்பதால், இணையப் போக்குவரத்து மிகுதியாக உள்ள நேரத்தில், தற்காலிகச் சேவை தடங்கல் ஏற்படலாமென Open AI கூறியது.

இதுவே அமெரிக்கா மற்றும் கனடாவில், ஒரு சமூக ஊடகத்தில் நீங்கள் சந்தாத்தாரராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, எந்த கைப்பேசியிலிருந்தும் 1-800-ChatGPT அல்லது 1-800-242-8478 எண்களுக்கு அழைக்க முடியும்.

ஆக, இனி ChatGPT பயன்பாட்டுக்கு விவேகக் கைப்பேசி வேண்டும் என்றில்லை; இணைய வசதி இருந்தாலே போதுமென்ற அளவுக்கு நிலைமை முன்னேறி விட்டது.

WhatsApp-பை உலகம் முழுவதும் மாதத்திற்கு 2 பில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்; அதுவே ChatGPT-க்கு வாரத்திற்கு 300 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!