Latestமலேசியா

அனைவரையும் அரவணைத்துச் செல்வதால் மலாய் சமூகத்துக்கு கவலை வேண்டாம்; பிரதமர் உத்தரவாதம்

கோலாலம்பூர், டிசம்பர்-1,அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மடானி அரசாங்கத்தின் கொள்கைளால், தங்களின் நலன்கள் பாதிக்கப்பட்டு விடுமோ என மலாய்க்காரர்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை.

அரசாங்கமும் அதனை ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

சமமான பிரதிநிதித்துவம் மற்றும் வாய்ப்புகளை உறுதிச் செய்யும் பொதுநன்மை கொள்கையை அரசாங்கம் ஆதரிக்கிறது.

பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையில் அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லை என, பேராக், குவாலா கங்சார் மலாய் கல்லூரின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆண்டு விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய போது பிரதமர் சொன்னார்.

முந்தைய அரசாங்கங்களின் கொள்கைகள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், சொந்தக் கட்சியினருக்கும் நன்மையைக் கொண்டும் வரும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.

இதனால் அடிதட்டு மலாய்க்காரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

ஆனால், தான் நம்பும் நவீனமய பொதுநன்மை கொள்கையானது மேலும் வெளிப்படையானது, அரவணைத்துச் செல்லும் போக்கிலானது;

இதனால், நகர்ப்புற ஏழைகள், கிராம மக்கள் என அனைத்து மலாய்க்காரர்களுக்கும் எந்த பாகுபாடுமின்றி அரசாங்க அனுகூலங்கள் சமமாகக் கிடைப்பது உறுதிச் செய்யப்படுமென்றார் அவர்.

மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுராக்களின் சிறப்புரிமை கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்ந்து கட்டிக் காக்கப்படுவதை மடானி அரசாங்கம் உறுதிச் செய்யும்; எனவே மலாய் சமூகத்துக்கு தனதுரிமை குறித்த கவலை தேவையில்லாத ஒன்று.

அதே சமயம் மற்ற இனத்தவர்களையும் ஒதுக்கி வைக்க முடியாது; அனைவரையும் அரவணைத்துச் சென்றால் தான் நாடு முன்னேறும் என டத்தோ ஸ்ரீ அன்வார் தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!