Latestமலேசியா

அன்றாட விவகாரங்களை எளிதாக்க MyKad விவரங்களைப் புதுப்பிக்குமாறு JPN பொதுமக்களுக்கு அறிவுறுத்து

புத்ராஜெயா, ஏப்ரல்-16, தினசரி அலுவல்களுக்கான தரவுகள் துல்லிதமாக இருக்க ஏதுவாக, MyKad விவரங்களை அவ்வப்போது புதுபித்து வருமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

1990-ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ் பெயர், வீட்டு முகவரி மாற்றம் போன்ற தகவல்களை, புதுப்பிப்பு நோக்கத்திற்காகத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும் என, தேசியப் பதிவிலாகாவான JPN கூறியது.

MyKad-டில் நடப்பு விவரங்கள் சரியில்லை எனக் கண்டறிந்தால், அவற்றை மாற்றுவதற்கு JPN அலுவலகங்களுக்கு வர வேண்டும்.

உதாரணத்திற்கு, MyKad அட்டை வைத்திருப்பவர், நடப்பு தங்குமிடத்திலிருந்து மாறி புதிய இடத்தில் 90 நாட்களுக்கும் மேல் தங்குவாரேயானால், அவர் கண்டிப்பாக புதிய முகவரிக்கு MyKad அட்டையை மாற்றியாக வேண்டும்.

இது குறித்து JPN பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்தாலும், இது தனிநபரின் பொறுப்பே என JPN சுட்டிக் காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!