
கோலாலம்பூர், நவ 27 – சீரமைப்பு பிரதமராக திகழும் அன்வார் இப்ராஹிமிடம் மக்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். பக்காத்தான் ஹரப்பானின் தலைவராக மட்டுமின்றி பல துறைகளில் சீரமைப்பை அன்வார் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதால் அதனை அமல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்து வருவதாக பினாங்கு துணை முதலமைச்சரும் DAP-யின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான டாக்டர் ராமசாமி தெரிவித்தார். இதன் காரணத்தினாலேயே அன்வார் பிரதமராக வருவதற்கு மலேசியர்களில் பெரும்பாலோர் அவருக்கு வாக்களித்திருப்பதாக தமது முகநூல் மூலமாக வெளியிட்ட அறிக்கையில் ராமசாமி சுட்டிக்காட்டினார்.