
கோலாலம்பூர், நவ 5 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த கோலாகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் அப்துல் காலிட்டை நான்கு அண்டுகளுக்கு பெர்சத்து கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.
கட்சியின் ஒழுங்கு மற்றும் சட்டவிதியை மீறியதற்காக கோலாகங்சார் பெர்சத்துவின் தலைவருமான இஸ்கண்டாரை இடைநீக்கம் செய்வது என நேற்று கூடிய கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு செய்ததாக பெர்சத்து தலைமை செயலாளரான ஹம்சா சாய்னுட்டின் தெரிவித்தார்.
பெர்சத்துவின் உறுப்பினர் தகுதி மற்றும் அனைத்து கட்சி பதவிகளிலிருந்தும் நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து இஸ்கண்டார் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஹம்சா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தமது தொகுதியில் வாழ்க்கை செலவினம் அதிகரித்து வருதை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையை அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் பரிசீலினை செய்ததைத் தொடர்ந்து அன்வாருக்கு ஆதரவு வழங்குவதாக அக்டோபர் 12ஆம் தேதி இஸ்கண்டார் அறிவித்த மூன்று வாரங்களுக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.