
கோலாலம்பூர், ஜன 17 – கூட்டரசு அரசாங்கத்திற்கும் தமது தலைவர்களுக்குமிடையிலும் பனிப் போர் இருந்துவருவதாக வெளியான தகவலை திரெங்கானு மந்திரிபெசார் Ahmad Samsuri மறுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று திரெங்கானுவுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வருகை புரிந்தபோது மாநில தலைவர்கள் எவரும் அவரது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தவறியதற்கு தொடர்பில் ஏறபட்ட தவறே காரணம் என Ahmad Samsuri தெரிவித்திருக்கிறார். பொதுவான நலன்கள் தொடர்பான விவகாரங்களில் கூட்டரசு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மாநில அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லையென அவர் கூறினார். தொடர்பில் ஏற்பட்ட கோளாறினால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நீட்டிப்பதற்கு தாம் விரும்பவில்லையென அவர் தெரிவித்தார்