கோலாலம்பூர், மார்ச் 2 – எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ Anwar Ibrahim அவர்களின் சகோதரர் Rusli Ibrahim காலமானார். கடந்த சில நாட்களாக செலயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 வயதுடைய Rusli Ibrahim நேற்று பிற்பகல் மணி 2.30 அளவில் இறந்தாக அன்வார் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே பேரரசர் Sultan Abdulah Ahmad Shah , பிரதமர்
டத்தோஸ்ரீ ismail Sabri Yaakob ஆகியோர் Rusli Ibrahim மறைவுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொண்டனர்.