
கோலாலம்பூர், ஏப் 25 – நடப்பு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேசனல் மற்றும் தேசிய முன்னணிக்கிடையிலான சதித்திட்டம் எதிலும் தமக்கு தொடர்பு கிடையாது என ம.சீ.ச.வின் தலைவர் டத்தோஸ்ரீ Wee Kah Siong தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றுக்கு பிந்திய பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவது மற்றும் மலேசியர்களை பாதிக்கக்கூடிய விவகாரங்களில் மட்டுமே தாம் முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் கூறினார். ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான முயற்சி அல்லது அது தொடர்பான நடவடிக்கை எதுவுமே தெரியாத நிலையில் அதில் தாம் எப்படி சம்பந்தப்பட்டிருக்க முடியும் என தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள அறிக்கையில் Wee Kah Siong வினவினார்.
கட்சி தாவலுக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சியிலிருந்து விலகுவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தாலும் இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் கட்சியின் சார்பில் போட்டியிடும்படி தேசிய முன்னணி எம்.பிக்களை சில தரப்பு வலியுறுத்தி வருவதாக இணையத்தளம் ஒன்றில் வெளியான தகவல் குறித்து Wee Kah Siong அண்மையில் கருத்துரைத்திருந்தார்.