Latestஉலகம்

சீனாவில், 40 வெகு தூரம் பயணித்து, அரை மணி நேரம் காத்திருந்த இ-ஹெய்லிங் ஓட்டுனர்; சேவையை இரத்துச் செய்த பெண்ணுக்கு குவியும் கண்டனம்

சீனா, டிசம்பர் 15 – சீனாவில் பெண் ஒருவர், 40 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்து, “பிக்கப்” இடத்தில் அரை மணி நேரம் காத்திருந்த வாடகை கார் ஓட்டுனர் ஒருவர், தனது “லக்கேஜை” காரில் ஏற்ற தவறியதால், அவரது இ-ஹெய்லிங் ஆர்டரை ரத்து செய்த மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் கண்டனத்தை பெற்று வருகிறது.

தனது பெரிய “சூட்கேஸ்” பயணப் பையை காரில் ஏற்ற தவறியதால், அப்பெண் இ-ஹெய்லிங் ஓட்டுனருடன் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எனினும், நீண்ட தூரம் பயணித்தது, அரை மணி நேரமாக காத்திருந்தது. தங்கும் விடுதி நுழைவாயிலில் பாதுகாவலருடன் கருத்து வேறுபாடு காரணமாக உடல் சோர்வு மற்றும் மன உளைச்சலில் இருந்ததை சுட்டிக் காட்டி அப்பெண்ணை இ-ஹெய்லிங் ஓட்டுனர் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த அப்பெண், பயணப் பையை காரில் ஏற்றுவதும் ஓட்டுனருடைய பொறுப்பு தான் என கூறி, இ-ஹெய்லிங் ஆர்டரை இரத்து செய்ததாக கூறப்படுகிறது.

2021-ஆம் ஆண்டு, ஷென்சென் நகரிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில் நிகழ்ந்த அச்சம்பம் தற்போது மீண்டும் வைரலாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

அதன் விளைவாக, சம்பந்தப்பட்ட இ-ஹெய்லிங் நிறுவனம், அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுனரை கண்டித்து அபராதம் விதித்தது, சமூக ஊடக பயனர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலர் அந்த ஓட்டுனருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட பெண்ணையும், இ-ஹெய்லிங் நிறுவனத்தையும் கடுமையாக சாடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!