
மரண தண்டனை விதிக்கப்படும் அபாயகரமான போதைப் பொருள் குற்றச்சாட்டிலிருந்து 47 வயதான முனீஸ்வரன் மற்றும் Devashivasharman ஆகிய இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் கடந்த 17-1-2018 இல் பிற்பகல் 12. 30 மணியளவில் Jalan Jelapang ஈப்போ எனும் இடத்தில் உள்ள கடை வீடொன்றில் 12. 81 கிராம் Heroin-யின் மற்றும் 6.2 கிராம் மோர்பின் போதைப் பொருளை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிருபிக்கத் தவறிவிட்டதால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி பூபிண்டர் சிங் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் 16 பேரும் குற்றம் சாட்டபட்டவர்கள் சார்பில் எழுவரும் சாட்சியம் வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சார்பில் வழக்கறிஞர் சரான் சிங் ஆகியோர் ஆஜராகினர்.