கோலாலம்பூர், ஏப்ரல் 30 – அப்துல் கலாம் விருது விழாவில் சிறந்த அரசியல்வாதிகான விருதை ம.இகாவின் உதவித் தலைவர் டத்தோ முருகையா பெற்றுள்ளார்.
2009ஆம் ஆண்டில் பிரதமர் துறை அமைச்சின் கீழ் பொது புகார்களை கவணிக்கும் துணையமைச்சராக அரசியல் பயணத்தை தொடங்கினார்.
அந்த சமயத்தில் முருகையா PPP கட்சியின் இளைஞர் அணித் தலைவராகவும் இருந்துள்ளார்.
மிகுந்த விவேகத்துடன் மக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து இவர், அன்று மக்கள் மத்தியில் நற்பெயரையும் கொண்டிருந்தார்.
பின்னர், ம.இ.காவில் இணைந்த இவர் அக்கட்சியின் உதவித் தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 35 ஆண்டுகளாக அரசியல் அனுபவங்களை கொண்டவரும் சிறந்த சேவையாளருமான இவருக்கு, அண்மையில் அனைத்துலக அளவில் தமிழக APJ அப்துல் கலாம் அமைப்பின் கீழ் நடத்தப்பட்ட அப்துல் கலாம் விருது விழாவில் சிறந்த அரசியல்வாதிகான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.