கோலாலம்பூர், மார்ச் 1 – அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மட்டுமே அமனா இக்தியார் மலேசியாவின் கடன் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாக வெளியான தகவலை தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Noh Omar மறுத்தார்.
அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே அமனா இக்தியார் திட்டம் பயன்படுத்தப்படுவதாக Sungai Siput Pakatan Harapan நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு நியாயமற்ற ஒன்று என இன்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்தபோது நோ ஒமார் கூறினார்.
அம்னோ அதிகாரத்தில் இல்லாத போது பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தில் இருந்தபோதும் அமனா இக்தியார் மலேசியா வழக்கம்போல் செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுங்கை சிப்புட் தொகுதியில் அம்னோ மற்றும் ம.இ.கா உறுப்பினர்களுக்கு மட்டுமே Amanah Ikthiar வழங்கப்பட்டுள்ளதாக கேசவன் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்,