Latestமலேசியா

அமர்ந்திருந்த நிலையில் இறந்த யானை ; உரம் அல்லது களைக்கொல்லி மருந்தை உட்கொண்டிருக்கலாம்

பாடாங் தெராப். பிப் 16 – கெடா , Padang Terap -பில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த நிலையில் இறந்து கிடந்த யானை, அப்பகுயில் இருந்த உரம் அல்லது களைக்கொல்லி மருந்தை உட்கொண்டிருக்கலாமென, மாநில வனவிலங்கு – தேசிய பூங்கா பாதுகாப்பு துறையின் இயக்குநர் ஜமாலுல் நாசிர் இப்ராஹிம் (Jamalul Nasir Ibrahim) கூறியுள்ளார்.
யானை இறந்ததற்கான உண்மைக் காரணத்தை அறிய , மருத்துவ ரீதியாக சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில். அந்த விலங்கு இறந்து கிடந்த இடமான Pedu காடு யானைகளின் வசிப்பிடமாக உள்ளது. எனவே அருகிலுள்ள பகுதிகளில் யானைகள் நடமாடுவது வழக்கமானதாக இருக்கிறது. ஆகவே, அருகிலுள்ள பகுதியில் விவசாயம் செய்பவர்கள் , பயிர்களுக்காக பயன்படுத்தப்படும் உரம் அல்லது களைக்கொல்லி மருந்தை முறையாக பாதுகாத்து வைக்கும்படி Jamalul Nasir Ibrahim கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!