
ஈப்போ, செப் 25 – மேரு ராயாவில் உள்ள பிகேஎன்பி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல துறைகளில் இருந்து வர்த்தகர்கள் கலந்துக்கொண்டதுடன் வர்த்தக துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் சிலரும் கலத்துக்கொண்டனர். இந்த கருத்தரங்கில் பல பேச்சாளர்கள் வர்த்தக துறையை மேம்படுத்துவது, கடனுதவி பெறுவது, அதன் விரிவாக்கத்திற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள குறித்து கருத்தினை வெளிப்படுத்தினர்.
அதில் வங்கி துறை அதிகாரிகளின் உரை, தன்முனைப்பு உரை , வர்த்தத் துறைக்கு தேவைப்படும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.அமால் மக்மோர் சமுக நல அமைப்பின் செயலாளர் க. நாச்சிமுத்துவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் என் . கிருஷ்ணன், எம். இந்திரன், ஜேசன் ஓங் , லீலா ராமன் ராமமூர்த்தி, சுரேஷ் ஆறுமுகம், கே. விஜேந்திரன் , வி. விவேகனந்தா, ஜோர்ச் ஆகியோரின் உரையும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வு குறித்து பேசிய க. நாச்சி முத்து , இந்தியர்கள் வர்த்தக துறையில் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் அதிகமானோர் கலந்துகொண்டது அவர்களது ஆர்வத்தை வெளிப்படையாக காணமுடிந்ததாக அவர் கூறினார். இதுபோன்ற கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்படும் என அவர் கூறினார்.