Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்
அமெரிக்கப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் துயரம்; கூட்டத்தில் டிரக் புகுந்து 10 பேர் பலி
நியூ ஆர்லியன்ஸ், ஜனவரி-2, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டத்தின் போது, அதிவேகமாக வந்த டிரக் லாரி, கூட்டத்தில் புகுந்ததில் 10 பேர் பலியாயினர்.
மேலும் 30 பேர் அதில் காயமடைந்தனர்.
பரபரப்பான Bourbon சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
லாரியை ஓட்டி வந்து கூட்டத்தில் மோதிய ஓட்டுநர் பின்னர் கூட்டத்தினரை நோக்கி, துப்பாக்கியாலும் சுட்டிருக்கிறார்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த போலீசார் தாக்குதல்காரனை சுட்டுக் கொன்றனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட வேளை, மீட்புப் பணிகள் தொடருகின்றன.
இதுவொரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடுமென சந்தேகிக்கும் போலீசார் புலன்விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.