கோலாலம்பூர், மே 5 – சிவிலியன்களுக்காக அமெரிக்க அதிபர் வழங்கும் அமெரிக்காவின் உயரிய Fredom விருதை மலேசியாவின் Tan Sri Michelle Yeohவுக்கு அதிபர் Joe Biden வழங்கி கௌரவித்தார். சிறந்த நடிகைக்கான Academy விருதை வென்ற ஆசியாவின் முதல் நபராக விளங்கும் ஈப்போவைச் சேர்ந்த Michelle Yeohவுடன் இதர 18 பேர் அமெரிக்க அதிபரின் Freedom விருதை பெற்றனர். அமெரிக்காவின் முன்னாள் செனட்டர் Elizebeth Dole, முன்னாள் துணையதிபர் Al Gore , முன்னாள் வெளியுறவு அமைச்சர் John Kerry, New York நகரின் முன்னாள் மேயர் Michael Bloomberg ஆகியோரும் இந்த விருதை பெற்றனர்.
அமெரிக்க பிரஜைகளுக்கு மட்டுமின்றி உலகளாவிய நிலையில் அமைதி, கலாச்சாரம் மற்றும் இதர முக்கிய துறைகளில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றியவர்களுக்காக Freedom விருதை 1963ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் John F. Kennedy முதல் முறையாக வழங்கி அறிமுகப்படுத்தினார். Everything Everywhere All at once திரைப்படத்தில் நடித்ததற்காக கடந்த 2023ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான Oscar விருதை வென்ற முதல் ஆசிய மற்றும் மலேசியர் என்ற பெருமையை Michelle Yeoh பெற்றார்.