
மறு பிறவியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? அதுவெல்லாம் பொய் என உடனே சொல்லிவிடாதீர்கள். இத்தாலியில் 100 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பிரபல Gucci ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் தோற்றுனர் Guccio Gucci -யின் மறு பிறவி தங்களின் 7 வயது மகன் என கூறுகிறது அமெரிக்காவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று. Max Alexander எனும் அச்சிறுவன் வடிவமைத்த ஆடைகள் தற்போது மிக வைராகியுள்ளதே அதற்கு காரணம். சில பிரபலங்கள் கூட அச்சிறுவனிடம் ஆடை வடிவமைக்க ஆர்டர் கொடுத்துள்ளனர். 4 வயது இருக்கும் போதே யாரும் கற்றுக் கொடுக்காமல் தானாகவே தையல் கலையைக் கற்றுக் கொண்டதாக அவனின் குடும்பத்தார் தெரிவித்தனர். Max-சும் தாம் Gucci-யின் மறு பிறவி என்பதாலேயே தனக்கு இந்த அபூர்வ சக்தி கிடைத்திருப்பதாக கூறுகிறான். அவன் இந்த சிறிய வயதில் முறையான பயிற்சி இன்றி எப்படி இப்படியெல்லாம் வடிவமைத்து தைக்கிறான் என பலருக்கும் ஆச்சரியம். பெரியவன் ஆனவுடன் Gucci நிறுவனத்திற்கு தலைமையேற்கப் போவதாகவும் Max கூறி வருகிறான். இருந்தாலும் தான் Gucci-யின் மறு பிறவி என்பதை எப்படி Max நிரூபிக்கப்போகிறான் எனபதே கேள்வி!