
வாஷிங்டன். செப் 3 – அமெரிக்கா Tennessee i யைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே நீளமான கூந்தலை வைத்திருக்கிறார். பிறந்தது முதல் 33 ஆண்டுகளாக அந்த பெண் தமது கூந்தலை கத்தரிக்காமல் இருந்ததைத் தொடர்ந்து அவர் உலகிலேயே நீளமான கூந்தலை கொண்டவராக இருக்கும் வரலாற்றை ஏற்படுத்தியுள்ளார்.
Tami Manis என்ற அந்த பெண் தனது 5 அடி , 8 அங்குலம் கொண்ட உலகிலேயே நீளமான கூந்தலுக்காக கின்னஸ் விருதையும் பெற்றுள்ளார். நீளமான முடியை வளர்த்து வரும் தமது விருப்பம் குறித்து அவர் தற்காத்து பேசியுள்ளார். தலையின் முன்புறம் முட்டியை வெட்டிய பின் முகத்திற்கு அருகே அதனை கட்டையாக்கி,தலைக்கு பின்னால் முடியை நீளமாக வைத்திருக்கும் Mullet என்ற சிகையலங்கரத்தில் அவர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.