வாஷிங்டன், பிப் 17 – அமெரிக்காவில் Ivy லீக்கின் சிறந்த ஸ்குவாஸ் ஆட்டக்காரராக மலேசியாவின் S.சிவசங்கரி தேர்வு பெற்றார். கெடாவைச் சேர்ந்த சிவசங்கரி தற்போது அமெரிக்காவில் இருந்து வருகிறார்.
அந்த விருதைப் பெறும் Cornell பல்கலைக்கழகத்தின் முதல் ஸ்குவாஸ் விளையாட்டாளராகவும் சிவசங்கரி திகழ்கிறார். இந்த பருவத்தில் 12 ஆட்டங்களில் அவர் வெற்றி பெற்றதன் மூலம் சிறந்த ஸ்குவாஸ் விளையாட்டாளரக தேர்வு பெற்றார்.
தற்போது உலகின் 26 ஆவது சிறந்த ஸ்குவாஸ் விளையாட்டாளராக திகழும் சிவசங்கரி Cornell பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மலேசியாவின் Wen Li Lai யுடன் ALL Ivy லீக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.