அமெரிக்காவில் கைப்பேசியை கடித்து விளையாடி நாய்; திடீரென வெடித்துச் சிதறியதால் வீட்டில் தீ
ஓக்லஹோமாவில் (Oklahoma), ஆகஸ்ட்-14, அமெரிக்கா, ஓக்லஹோமாவில் (Oklahoma) உள்ள வீட்டொன்றில் லத்தியம்-அயன் பேட்டரியை (Lithium-ion battery) நாய் கடித்த போது, வீட்டில் தீ பரவிய பகீர் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட அவ்வீட்டில் செல்லப்பிராணிகளாக இரண்டு நாய்களும், ஒரு பூனையும் இருந்துள்ளன.
ஒருநாள் அம்மூன்றும் வரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்த போது, தரையிலிருந்த மெத்தையில் படுத்திருந்த நாய் அந்த பேட்டரியை கடித்துக் கொண்டிருந்தது.
திடீரென பேட்டரி வெடித்துச் சிதறியதால் செல்லப்பிராணிகள் மூன்றும் அலறியடித்து ஓடின.
மெத்தையில் பேட்டரி தீப்பற்றி எரிவதை கண்டு இரு நாய்களும் ஓரமாக அதிர்ச்சியுடன் பார்ப்பது, வரவேற்பறையினுள் இருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
எனினும், தீ ஏற்பட்ட போது, வீட்டிலிருந்த செல்லப் பிராணிகள் ஒரு கதவு வழியாக தப்பித்துக் கொண்டன.
நல்ல வேளையாக வீட்டிலிருந்தவர்கள் தகவல் கொடுக்க, தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
லித்தியம்-அயன் பேட்டரிகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாத வகையில் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டுமென்றும் தீயணைப்புத் துறை அறிவுறுத்தியது.