வாஷிங்டன், ஆகஸ்ட் -28 – கொசுவால் பரவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் நோயாளி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான நியூ ஹேம்ஷாயரில் (New Hampshire) அம்மரணம் பதிவாகியுள்ளது.
மத்திய நரம்பு மண்டலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
New Hampshire-ரில் ஆகக் கடைசியாக 2014-ம் ஆண்டு அந்நோய் கண்டறியப்பட்டது.
EEE அல்லது triple E என அந்நோய் அழைக்கப்படுகிறது.
நோய் கிருமி கண்டதற்கான அறிகுறியாக கடுமையான வயிற்றுப் போக்கு, வாந்தி, காய்ச்சல், தலைவலி, வலிப்பு வருமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நோய் முற்றினால், மூளைப் பாதிப்பு, மூளை அழற்சி போன்ற கடுமையான நரம்பியல் பாதிப்புகளும் ஏற்படும்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 விழுக்காட்டினர் மரணமடைகின்றனர்; நோயிலிருந்து மீண்டவர்கள் உடல் அல்லது மன ரீதியாக பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.
அதற்கு சிகிச்சையளிக்க தற்சமயம் தடுப்பூசியோ மருந்தோ இல்லை.