
நியூ யார்க், ஜூன் 8 – அமெரிக்காவில் சுரங்க ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளை ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடும் புதிய வன்செயல் கலச்சாரம் உருவாகியிருப்பது குறித்து அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். Bronx வட்டாரத்தில் Jackson Avenue சுரங்க ரயில் நிலையத்தில் தள்ளிவிடப்பட்ட பெண் பயணி ஒருவர் பொதுமக்கள் உதவியோடு வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எலும்பு முறிவுக்கு உள்ளான அந்த பெண்ணின் நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய Theodore Ellis என்ற ஆடவரை போலீசார் கைது செய்தனர். சுரங்க ரயில் நிலையங்களில் பயணிகளிடம் வழிப்பறி கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் நடைபெற்ற போதிலும் பயணியை கீழே தள்ளிவிடும் புதிய வன்முறைக் கலச்சாரத்தை தாங்கள் கடுமையாக கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.