Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டலுக்கு வெளியே சைபைர் டிரக் வெடித்து ஒருவர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜனவரி-2, அமெரிக்கா, லாஸ் வெகாசில் டோனல்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே சைபர் டிரக் எனப்படும் மின்சார டிரக் வாகனம் வெடித்ததில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவர் சைபர் டிரக்கில் இருந்தவர் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் 7 பேர் அதில் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

Trump International Hotel-லின் நுழைவாயிலில் கண்ணாடி கதவுகளுக்கு வெளியே அந்த தெஸ்லா சைபர் டிரக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

திடீரென அது வெடித்துச் சிதறுவதும், பின்னர் பட்டாசுகள் போன்ற சிறு சிறு  வெடிப்பு ஏற்படுவதும் வைரலான CCTV கேமரா பதிவில் தெரிகிறது.

அவ்வெடிப்புச் சம்பவத்தை தெஸ்லா நிறுவனத்தின் மொத்த மூத்த அதிகாரிகள் குழுவும் தீவிரமாக விசாரித்து வருவதாக, அதன் நிறுவனர் இலோன் மாஸ்க் கூறியுள்ளார்.

இது போல் இதுவரை நாம் பார்த்ததில்லை என தனது X தளப் பதிவில் அந்த உலகக் கோடீஸ்வரர் குறிப்பிட்டார்.

சம்பவத்திற்கான காரணம் தெரிந்ததும் அதனைப் பகிரவும் அவர் உறுதியளித்தார்.

இவ்வேளையில் அதிபர் ஜோ பைடனுக்கும் அவ்வெடிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் உதவி ஏதும் தேவையென்றால் அதனை வழங்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்துக்குள் டிரக் லாரி புகுந்து 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த லாஸ் வெகாஸ் வெடிப்புச் சம்பவம்  ஏற்பட்டுள்ளது.

எனினும் இரு சம்பவங்களுக்கும் தொடர்புண்டா என்பது பற்றி லாஸ் வெகாஸ் போலீஸ்  வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!