Latestமலேசியாவிளையாட்டு

அமெரிக்காவில் பயிற்சியைத் தொடர விரும்பும் ஷெரீன்; கூடுதல் நிதி ஆதரவை எதிர்பார்க்கிறார்

ஃபுளோரிடா, ஆகஸ்ட்-12 – தேசிய ஓட்டத் தாரகை ஷெரீன் சேம்சன் வல்லபோய் (Shereen Samson Vallabouy) தனது அமெரிக்கப் பயிற்றுநர் டெரிக் வைட்டின் (Derrick White) கீழ் தொடர்ந்து ஃபுளோரிடாவில் (Florida) பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறார்.

ஆனால், நிதிபிரச்னை அவருக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது.

ஃபுளோரிடாவில் தங்கி 13 மாதங்கள் பயிற்சியை மேற்கொள்வதற்கு ஏதுவாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு கடந்தாண்டு ஜூனில் ஷெரினுக்கு 4 லட்சம் ரிங்கிட் நிதியுதவியை ஒதுக்கியது.

ஆனால், அவருக்கு தற்போது கூடுதல் நிதி ஆதரவு தேவைப்படுகிறது.

ஷெரீனின் அடுத்த இலக்கு, ஜப்பான், தோக்யோவில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் உலக ஓட்டப்பந்தயப் போட்டிக்குத் தகுதிப் பெறுவதே.

அதற்கு, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டங்களில் தனது தேசியச் சாதனை நேரத்தை மேம்படுத்துவதோடு, உலகத் தர வரிசையிலும் ஷெரீன் முன்னேற வேண்டியுள்ளது.

ஃபுளோரிடாவில் தங்கி வைட்டின் கீழ் பயிற்சியைத் தொடர்ந்தால், தனது இலக்கை அடைவது சாத்தியமாகுமென, ஆசியப் போட்டியின் வெண்கலப் பதக்க வெற்றியாளருமான ஷெரீன் நம்புகிறார்.

26 வயது ஷெரீனின் நீண்ட கால இலக்கு, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிப் பெறுவதாகும்.

நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்திற்குத் தகுதிப் பெறும் வாய்ப்பை, வெறும் 0.86 வினாடிகளில் ஷெரீன் நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!