ஆர்லிங்டன், பிப் 10 – பள்ளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை மேலும் அதிகமான அமெரிக்க மாநிலங்கள் ரத்து செய்வதால் பெற்றோர்களில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். கோவிட் தொற்று பரவல் குறைந்து வருவதால் கட்டாயமாக முகக் கவசம் அணியும் உத்தரவு ரத்து செய்யப்பட்டாலும் இத்தகைய தளர்வினால் சுகாதார பாதிப்பு உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தையும் பெற்றோர் கொண்டுள்ளனர். கோவிட் வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் ஜனநாயக கட்சி நிர்வாகத்திலுள்ள அமெரிக்காவின் 16 மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் குடியரசு கட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டெக்ஸாஸ் மற்றும் புளோரிடா போன்ற மாநிலங்களில் கட்டாய முகக்கவசத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி15 hours ago