
கென்டக்கி, செப் 26 – அமெரிக்காவில் நெஞ்சுப் பகுதி மற்றும் கைகளில் பெரிய தசையோடு பிறந்த அர்மாணி என்னும் பெண் குழந்தை ‘மினி ஹல்க்’ என நெட்டிசன்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
உடலில் கை மற்றும் நெஞ்சில் கட்டி வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள அக்குழந்தை, பார்ப்பதற்கு ஹல்க் போன்று இருக்கிறது.
அக்குழந்தையின் தாயார் கர்ப்பமாக இருந்த சமயத்தில், வயிற்றின் அளவைப் பார்த்து, மூன்று குழந்தைகள் வளர வாய்ப்பிருப்பதாக பலர் கூறியிள்ளனர். ஆனால், ஸ்கேன் செய்த மருத்துவர்கள், குழந்தையின் இருதயத்துக்கு வெளியே நீர் கோர்த்துள்ளதாக கூறியுள்ளனர். கரு கலைப்பில் விருப்பம் இல்லாத அக்குழந்தையின் பெற்றோர்கள், குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். இருதயத்துக்கு வெளியே கோர்த்துள்ள நீரினால், அக்குழந்தைக்கு நெஞ்சு மற்றும் கைகளில் பெரிய தசைகள் உருவாகியுள்ளன.
இதனிடையே, அக்குழந்தையின் இருதயத்திலிருந்து நீரை வெளியேற்ற பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் கூறியிருந்தாலும், இப்போது வரை அது ஆரோக்கியத்துடன் இருக்கிறது. குழந்தை கூடிய விரைவில் குணமடைய வலைத்தளவாசிகள் பிரார்த்தனை செய்து வருவதாக கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்