Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்
அமெரிக்காவில் மீண்டுமொரு விமான விபத்து; பிளாடெல்பியாவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது

பிளாடெல்பியா, பிப்ரவரி-1 – அமெரிக்கா, பிளாடெல்பியாவில் சிறிய இரக விமானமொன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பெரும் தீ ஏற்பட்டுள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஒரு பெரிய தீப்பிழம்பு கிளம்பியதாகவும், தொடர்ந்து தரையில் பல தீப்பொறிகள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
சம்பவ இடத்தை நோக்கிச் செல்லும் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டு, தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த தனியார் விமானம் அறுவரை ஏற்றியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கு என்னவானது என்பது குறித்து போலீஸோ தீயணைப்புத் துறையோ உடனடி தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.
வாஷிங்டனில் பயணிகள் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி, அனைத்து 67 பயணிகளும் உயிரிழந்த சம்பவம் நடந்து, 2 நாட்கள் இடைவெளியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.