வாஷிங்டன், மார்ச் 7 – அமெரிக்காவில் கோவிட் தொற்று மீதான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற மறியலில் பெரிய அளவில் வாகன ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட லோரிகள், அலங்கார வாகனங்கள் மற்றும் கார் ஓட்டுநர்களும் வாஷிங்டனின் புற நகர்ப் பகுதியை சுற்றிவந்து தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தனர். கலிபோர்னியாவில் தொடங்கிய இந்த வாகன ஊர்வலத்தில் அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.
கோவிட் தொற்று தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அமெரிக்கா கொடியை பறக்கவிட்டபடி அந்த மறியலில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.