
வாஷிங்டன், மே 19 – அமெரிக்காவுக்கான மலேசிய தூதராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ Nasri Aziz தமது துணைவியார் டத்தின்ஸ்ரீ Hafli யுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தையும் ஜோ பைடனிடம் Nasri Aziz சமர்ப்பித்தார். மலேசியா மற்றும் அமெரிக்காவுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவற்கான தமது கடப்பட்டையும் அவர் தெரிவித்தார். 1957 ஆம் ஆண்டு தொடங்கிய மலேசிய – அமெரிக்க அரசதந்திர நட்புறவு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே இரு வழி நட்புறவு மட்டுமின்றி வர்த்தகத்துறையிலும் ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவின் மூன்றாவது வர்த்தக பங்காளியாகவும் அமெரிக்கா விளங்கியது.