
வாஷிங்டன், ஜூன் 6 – குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணையதிபர் மைக் பென்ஸ் (Mike Pence) அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
டோனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிபராக இருந்தபோது 67 வயதுடைய மைக் பென்ஸ் துணையதிபர் பதவியில் இருந்தார்.
அவரது இந்த முடிவினால் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கான வேட்பாளரின் அங்கீகாரத்தை பெறுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
டோனால்ட் ட்ரம்ப் மற்றும் புலோரிடாவி கவர்னர் டெசான்திஸ் (Desantis) ஆகிய இருவரும் ஏற்கனவே அடுத்த ஆண்டு அதிபர் பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிற்கப்போவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது