Latestஉலகம்

அமெரிக்க அழகி தற்கொலை தொடர்பில் பல கோணங்களில் விசாரணை

வாஷிங்டன், பிப் 2 – அமெரிக்க அழகி Cheslie Kryst தற்கொலை தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டின் அமெரிக்க அழகிப் பட்டத்தை வென்ற Cheslie Kryst 60 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இயல்பாகவே அழகான அவர், அழகிப் போட்டியில் பல வெற்றிகளை குவித்தவர், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்சியின் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றி வந்துள்ளார். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.15 அளவில் Manhattan னிலுள்ள Orian ஆடம்பர வீடமைப்பு பகுதியில் 60 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த 30 வயதுடைய Cheslie அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சாலையோரத்தில் விழுந்து கிடந்தார் என நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டது. அந்த சம்பவம் நடப்பதற்கு முன் தமது முகத்தோற்றத்தைக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததோடு அதன் கீழ் இந்த நாள் அமைதி மற்றும் பாதுகாப்பை கொண்டு வரும் என பதிவிட்டிருந்தார். இதனிடையே Cheslie கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக அவரது தந்தை Rodney Kryst முதல் முறையாக கூறியுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் Chelsie போதைப் பொருளை பயன்படுத்தவில்லை என்பதோடு மது அருந்தவில்லை என்றும் Rodney Kryst தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!