Latestஉலகம்

அமெரிக்க இந்தியர்களின் மனதை வென்ற கமலா ஹாரீஸ்; சிறுபான்மையினரின் ஒரே நம்பிக்கையாக மாறுகிறார்

வாஷிங்டன், ஆகஸ்ட் -24 – அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக் கொண்டு கமலா ஹாரீஸ் ஆற்றிய உரை வெகுஜன மக்களையும் ஈர்த்திருக்கிறது.

குறிப்பாக இந்திய வம்சாவளி அமெரிக்கர்களிடம் கமலாவின் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஆட்சிக் காலத்து வெளியுறவுக் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டம் போடும் சர்வாதிகார தலைவர்களின் செல்வாக்கை, அதிபரானாதும் ஒடுக்குவதற்கு கமலா உறுதியளித்துள்ளார்.

அப்பேச்சு, கமலாவைத் தங்களது தலைவியாகப் பார்க்கும் அமெரிக்க இந்தியர்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் உள்ளார நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இனவாதியாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் டிரம்பை விட, கமலா அதிபரானால், தங்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்குமென அமெரிக்க இந்தியர்கள் கருதுகிறார்கள்.

ஜனநாயகக் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் கமலா ஆற்றிய உரை, டோனல்ட் டிரம்புக்கு எதிரான வலுவான வேட்பாளராக அவரை அடையாளம் காட்டியுள்ளது.

ஏற்கனவே கருத்துக் கணிப்புகளில் டிரம்பை முந்தி வரும் கமலாவின் செல்வாக்கு, கட்சி மாநாட்டுக்குப் பிறகு மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அவரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியில் தெற்காசியர்கள் தேர்தல் நன்கொடைத் திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

கமலா ஹாரீஸின் தாயார் ஷாமளா கோபாலன், மருத்துவப் படிப்புக்காக 19 வயதில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர் ஆவார்.

இந்திய வம்சாவளி பெண், அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த உயரியப் பதவியில் அமர்ந்தால், எல்லாருக்கும் பெருமை தானே என அமெரிக்க இந்தியர்கள் கூறி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!