Latestஉலகம்

அமெரிக்க சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது 14 பேர் மரணம்

பிரேசிலின் Amazonas மாநிலத்தில் அமெரிக்க சுற்றுப்பணிகள் உட்பட பிற பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 14பேர் மரணம் அடைந்தனர். நேற்று நிகழ்ந்த அந்த விமான விபத்தில் 12 பயணிகளும் இரண்டு ஊழியர்களும் இறந்ததை பிரேசில் மாநில கவர்னர் Wilson Lima தெரிவித்தார். விபத்துக்குள்ளான இடத்தில் தேவையான உதவிகளை மேற்கொள்ளும் நடவடிகையில் தற்போது கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார். தங்களது விமானம் விபத்துக்குள்ளானதை Manaus Aerotaxi Airline விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது. அந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்தது. எனினும் இந்த விபத்து குறித்த இதர மேல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!