Latestமலேசியா

அமெரிக்க பொது விருது பேட்மிண்டன் போட்டி ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசிய ஜோடி வெற்றி

கோலாலம்பூர், ஜூலை 17 – அமெரிக்க பொது விருது பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் Goh Sze – Nur Izzuddin Rumsani வெற்றியாளர் பட்டத்தை வென்றனர். அவர்கள் இறுதியாட்டத்தில் 21-9. 21-10 என்ற புள்ளிக் கணக்கில் தைவானின் Lee Fang Chih – Lee Fang Jen ஜோடியை வீழ்த்தி இவ்வாண்டின் முதல் வெற்றியாளர் விருதை வென்றனர். 2022 ஆம் ஆண்டு ஜெர்மன் பொது விருது பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற பின் மீண்டும் இப்போது அனைத்துலக பேட்மிண்டன் போட்டியில் அவர்கள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். அமெரிக்க பொது விருது பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் Goh Sze – Nur Izzudin Rumsani 16.590 அமெரிக்க டாலர் ரொக்கத்தை பரிசாக வென்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!